Saturday, April 25, 2026
No menu items!

பாப்பரசர் பிரான்சிஸ்

பிரான்சிஸின் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி..!

ரோம் புனித மேரி பேராலயத்தில் உள்ள பாப்பரசர் பிரான்சிஸின் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு நேற்று (27/04/2025) அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாப்பரசர் பிரான்சிஸின்  விருப்பத்தின் பேரில் அவரது உடல் வத்திக்கானுக்குப்  பதிலாக ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் எளிய கல்லறை ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து...

பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளதாக தகவல்..!

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த 21ஆம் திகதி நித்திய இளைப்பாறினார். பாப்பரசர் பிரான்சிஸின்  மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாப்பரசரின்  இறுதிச்சடங்கு 26ஆம் திகதி நடைபெற உள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பாப்பரசர் பிரான்சிஸின்  உடல் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அதன்பின்னர், உலக நாடுகளின்  தலைவர்கள், பொதுமக்கள்...

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவிற்கு விஜய் இரங்கல்..!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் இன்று காலமானதையடுத்து அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பதிவிட்டுள்ளதாவது, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வத்திக்கான் நகரத்தின் இறையாண்மையாளருமான, உலகெங்கிலும் உள்ள மில்லியன்...

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவிற்கு ட்ரம்ப் இரங்கல்!

மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நினைவுகூரும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். “பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு அமைதி உண்டாகட்டும்! கடவுள் அவரையும் அவரை நேசித்த அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!” என்று ட்ரம்ப் தனது சமூக ஊடக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். பாப்பரசரின் மறைவைத் தொடர்ந்து ட்ரம்ப் அவரை நினைவு கூர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாப்பரசர் பிரான்சிஸின் உயிரிழப்புக்கான காரணம் வெளியானது..!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 வயதில் நேற்று திங்கட்கிழமை (21/04/2025) காலமானார். "பக்கவாதம், கோமா மற்றும் மீளமுடியாத இருதய சுற்றோட்ட செயலிழப்பு" ஆகியவற்றின் காரணமாக மரணித்துள்ளதாக  வத்திக்கான் சுகாதார பணிப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி கையொப்பமிட்ட இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்..!

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் இரங்கலை பதிவிட்ட ஜனாதிபதி, இலங்கை மக்கள் சார்பாக பாப்பரசருக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயத்திற்காக அவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்று...

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சிகளாக அங்கீகரிக்க முடிவு!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சிகளாக அங்கீகரிக்க வத்திக்கான் முடிவு செய்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்தார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கட்டுவாபிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களையும் இவ்வாறு விசுவாசத்தின் சாட்சிகளாக அங்கீகரிக்க முடிவு...

வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் பாப்பரசர் பிரான்சிஸ்..!

இத்தாலியின் ரோமில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவரும் பாப்பரசர் பிரான்சிஸ் இன்றைய தினம் சிகிச்சை நிறைவடைந்து அங்கிருந்து வெளியேறவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வத்திக்கானில் குறைந்தது இரண்டு மாதங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி...

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்..!

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது. 88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், சுவாச கோளாறு காரணமாக கடந்த 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்திய பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வத்திகான் தேவாலயத்தில்...

மீண்டும் மோசமாகியுள்ள பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை..!

அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 88 வயதான போப் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது. சோதனைகளில் சுவாச தொற்று இருப்பது தெரியவந்ததால், அவரது உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக மூச்சுத்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img