Sunday, July 26, 2026
No menu items!

புதிய ஜனநாயக முன்னணி

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28) போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் 2.5 மில்லியன் டொலர் பணம் இணையவழி ஊடாக களவாடப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரான...

ரணிலின் குடியுரிமையை நீக்க முடியாது – உறுதியாக கூறும் ராஜித சேனாரத்ன..!

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக படிக்காதவர்களே அதில் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். எனவே இவர்களால் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையையும் நீக்க முடியாது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாதென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் புதன்கிழமை (19/03/2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...

‘தொந்தி வயிற்றுக்காரன்’ என கோப் குழுவில் அவமதித்துள்ளதாக சாமர சம்பத் குற்றச்சாட்டு!

என்னை ‘தொந்தி வயிற்றுக்காரன்’ என்று கோப் குழுவில் அவமதிக்கும் வகையில் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் நடந்துகொண்டுள்ளார் என்றும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், சபாநாயகரி டம் முறையிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (18/03/2025) சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்தே சாமர சம்பத் எம்.பி. இதனைக் கூறினார். அதன்போது அவர்...

பட்டலந்த விவகாரத்தில் அரசாங்கம் தோல்வியடையும் – சாமர சம்பத்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் தோல்வியடைந்ததை போன்று பட்டலந்த விவகாரத்திலும் ஒன்றும் செய்ய முடியாது அரசாங்கம் தோல்வியடையும் என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (17/03/2025) நடைபெற்ற வரவு செலவுத்திட்டத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார...

குரங்குகளை எண்ணும் விளையாட்டை விளையாடுகிறார்கள் – சபையில் சாமர சம்பத் ..!

கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்க்க முதலில் காரணமாக அமைந்தது அந்த அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர்தான் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “அப்போது 2022 அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததற்கு முக்கிய காரணம் என்ன? அந்த நேரத்தில் அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சர், நாட்டில் இன்னும் ஒரு...

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மைத்திரி பங்கேற்பு!

புதிய ஜனநாயக முன்னணியின் விசேட கூட்டம் நேற்று (24) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டமானது கொழும்பு 07, ப்ளவர் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இரண்டு மணி நேர இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மீண்டும் நாடாளுமன்றத்தில் ரணில்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வருட இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, புதிய ஜனநாயக முன்னணி சார்பில் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்வதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்தை ரணில் விக்கிரமசிங்க நிரப்பவுள்ளார். ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின் எதிர்க்கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள்...

பொதுஜன பெரமுனவின் முன்னாள் எம்.பிக்களுக்கு மஹிந்த பகிரங்க அழைப்பு..!

கடந்த காலங்களை மறந்து  மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்தால் பலமுடன் செயற்படலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய...

ஆறு மாதங்களில் பாதுகாப்பு தேடுவீர்கள் – சாமர எம்.பி அரசுக்கு சவால்..!

‘‘எதிர்க்கட்சியிலுள்ள எங்களுக்கு பாதுகாப்பு அவசியமில்லை. அரசாங்கத்திலுள்ளவர்களுக்கே பாதுகாப்பு தேவைப்படுகின்றது. இன்னும் ஆறு மாதங்களில் அவர்கள் பாதுகாப்பைத் தேடும் நிலைமை உருவாகும் என்று புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

அமைச்சர்களின் கல்வித் தகைமை என்ன? – ஆராய புதிய திட்டம்!

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் கல்வித் தகைமைகளை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் புதிய ஜனநாயக முன்னணியும் தீர்மானித்துள்ளன. இது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஊடாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img