Sunday, November 8, 2026
No menu items!

பொலிஸார்

பொலிஸாரின் அடாவடித்தனம் – வர்த்தகர் மீது தாக்குதல்..!

ஏறாவூர் மைலம்பாவெளி பகுதி, பிராதன வீதியில் மதுபோதையில் சிவில் உடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இரு பொலிஸாரின்  மோட்டார் சைக்கிளை முந்திச் சென்ற வர்த்தகர் ஒருவரை நிறுத்தி அவர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட இரு  பொலிஸாரும் அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18/02/2025)...

சிதைவடைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவயாலதென்ன பிரதேசத்தில் மகாவலி கங்கைக்கு அருகில் திங்கட்கிழமை (17) மாலை சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது கண்டி வைத்தியசாலையின்...

இரத்தினபுரியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி!

இரத்தினபுரி - எஹெலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள ஹொரகொட வீதியில் நேற்று திங்கட்கிழமை (17) கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரைக் கொலை செய்து  இருவரைப் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். எஹெலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள மொரகல சந்திப் பகுதியில் வைத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு..!

அநுராதபுரம், பதவிய, மைத்திரிபுர பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் பதவிய பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (16/02/2025) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய பதவிய பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் ஆவார். சந்தேக நபர்  நீண்ட நாட்களாக சட்டவிரோத மதுபானத்தினை தயாரித்து...

கோவில் கலசத்தை திருடிய நபர்கள் கைது!

அங்குருவத்தோட்டை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து மூன்று அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தை திருடிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் திருடிய பெட்டியையும், அதை கொண்டு செல்ல பயன்படுத்திய வாகனத்தையும்  பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய பெண்..!

பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்வத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து  ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் ஐந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸாரின்...

பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு..!

இரத்தினபுரி, எஹெலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகடுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பேரனால் தாக்கப்பட்டு காயமடைந்த தாத்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (14/02/2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இரத்தினபுரி, பரகடுவ பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய முதியவர் ஆவார். உயிரிழந்தவர் தனது மகள் மற்றும் மருமகனுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளதுடன் மருமகனின் முதல் மனைவியின் மகனும் அவர்களுடன் வசித்து...

ஒரே இலக்க தகடுகளை கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரினால் பறிமுதல்!

தெஹிவளை மற்றும் தலுகம பகுதிகளில் ஒரே இலக்க தகடுகளை கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (13) பாணந்துறை, வலான மத்திய ஊழல் தடுப்பு தாக்குதல் பிரிவுடன் இணைக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளால் இந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைகளைத் தொடர்ந்து, ஒரு வாகனம் தெஹிவளையிலும் , தலுகமவில் உள்ள முதியன்சேவத்தை பகுதிகளிலும்...

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் அதிகரிக்கும் வீதி விபத்து!

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் தொடர்ச்சியாக விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருவதனால் மக்கள் வீதியோரங்களில்  எவ்வித பாதுகாப்பு சமிக்ஞை இன்றி நெல்லை உலரவிடுகின்றனர். இதனால் விபத்து சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் பாதுகாப்பு சமிக்ஞை இல்லாமல் நெல் உலரவிடப்பட்டதனால் கடந்த இரு தினங்களில் இருவர் விபத்துக்குள்ளாகி...

இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை – பொலிஸாரின் அதிரடி..! 

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பெரியகாளை கோட்டைமடு நெல்லிக்காடு ஆற்றுபகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையங்களை செவ்வாய்க்கிழமை (11/02/2025) பொலிஸார் முற்றுகையிட்டு ஒருவரை கைது செய்ததுடன் 10 பீப்பாக்கள் கொண்ட கோடாவை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.ஜ.சில்வாவின் தலைமையில் பொலிஸார் சம்பவதினமான செவ்வாய்க்கிழமை பெரியகாளைகோட்டைமடு பகுதியிலுள்ள கசிப்பு...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img