போதைப் பொருள்
உள்நாட்டுச்செய்திகள்
பற்பசையினுள் போதைப் பொருள் – சிக்கிய இருவர்..!
வவுனியா சிறைச்சாலைக்குள் பற்பசையினுள் போதைப் பொருளை மறைத்து எடுத்துச் சென்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையில் இருந்த நபர் ஒருவரை பார்வையிட வந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு சூட்சுமமாக போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்த நிலையில் கைது...
புதிய செய்திகள்
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
ஒரு கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சா போதைப் பொருளை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய திங்கட்கிழமை (24) மாத்தளை சந்தி குருந்தங்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன் கேரள கஞ்சா மற்றும் சந்தேகநபர்...
World News
பிற நாடுகளின் மீது வரி விதிக்கும் முடிவு பாதிப்பை ஏற்படுத்தும்; அமெரிக்காவுக்கு ஐ.நா எச்சரிக்கை!
'பிற நாடுகளின் மீது வரி விதிக்கும் முடிவால் பாதிப்பு தான் ஏற்படும்' என்று ஐ.நா.சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக ட்ரம்ப், பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
சட்டவிரோத குடியேறிகளை தடுக்கத் தவறியதற்காகவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தாதற்கும், மெக்சிக்கோ, கனடா மீது...
புதிய செய்திகள்
போதைப் பொருள் மன்னன் “பொடி லஸ்ஸி” கைது!
இலங்கையின் பாதாள உலக பிரமுகரும், போதைப் பொருள் மன்னனுமான ஜனித் மதுஷங்க, "பொடி லஸ்ஸி" என அழைக்கப்படும், இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 9, 2024 அன்று, பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளின் கீழ் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறைச்சாலை உயர் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த...
உள்நாட்டுச்செய்திகள்
சிவனொளி பாதமலையில் போதைப் பொருட்களுடன் 25 பேர் கைது..!
பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 25 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வார விடுமுறையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கொண்டு வருபவர்களை கைது செய்வதற்காக ஹட்டன் பிரிவின் உத்தியோகப்பூர்வ மோப்ப நாய்களின் உதவியுடன்...
புதிய செய்திகள்
வவுனியாவில் 19 பேர் கைது!
வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட யுக்திய சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா தலமை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது போதைப் பொருள் வைத்திருந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


