Saturday, August 1, 2026
No menu items!

போலி நாணயத்தாள்

கொலன்னாவை இளைஞரிடம் போலி நாணயத்தாள்; பொலிஸார் கைது

போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் மூன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து, வெல்லம்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் கொலன்னாவ பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது இந்தக் கைது இடம்பெற்றது. விசாரணைகளில், சந்தேகநபர் உள்ளூர் உணவகம் ஒன்றில்...

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய பெண்..!

பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்வத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து  ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் ஐந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸாரின்...

போலி நாணயத்தாள் உபயோகம் – கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள்..!

57 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் வைத்திருந்த 04 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். திகன பிரதேசத்தைச் சேர்ந்த விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரினால் தெல்தெனிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம்  மாணவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, நான்கு மாணவர்களும் திகன பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்று பொருட்களை...

ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத்தாள் தயாரித்தவர் கைது !

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அதுருகிரிய கொரத்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது…!

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் அக்கரைப்பற்று-பாலமுனை பிரதேசத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்கள் 34,43 மற்றும் 46 வயதுடைய களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது அக்கறைப்பற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின் போது, கார் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே இவ்வாறு போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில்...

நகைக்கடையொன்றில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது…!

இரத்தினபுரி, நகைக்கடையொன்றில் தங்க நகை வாங்க சென்ற நபர் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர் பதுளை சோனாதோட்ட பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் தங்க நெக்லஸ் வாங்குவதற்காக ஐயாயிரம் தாள் கட்டுகளை வைத்திருந்ததால் அவர்மேல் சந்தேகித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலி  நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது….!

மொரட்டுவை பிரதேசத்தில் எகொட உயன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் 48 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 2 மற்றும் போலி நாணயத்தாள்களை அச்சிடும்...
- Advertisement -spot_img

Latest News

இன்று கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் மழை,காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும்...
- Advertisement -spot_img