Sunday, November 8, 2026
No menu items!

மட்டக்களப்பு

காட்டு யானைக் கூட்டமொன்று தொடருந்துடன் மோதி விபத்து!  

கல்ஓயா தொடருந்து நிலையத்துக்கு அருகே மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மீனகயா தொடருந்து காட்டு யானைக் கூட்டமொன்றுடன் மோதியதில் 5 யானைகள் உயிரிழந்தன. அத்துடன் குறித்த தொடருந்தின் இயந்திரம் தடம்புரண்டுள்ளது. இதன்காரணமாக மட்டக்களப்பு - கொழும்பு தொடருந்து மார்க்கத்தில் சேவை பாதிப்படைந்துள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 11.20 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தடம்புரண்டுள்ள தொடருந்தை...

இன்றைய நாளுக்கான வானிலை!

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன்...

சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் நிர்வாக சபைக் கூட்டம்..!

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது நிர்வாக சபைக் கூட்டம் சனிக்கிழமை (15/02/2025) மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் செயலாளர் அகில இலங்கை சமாதான நீதிவான் துரைராஜா லெட்சுமிகாந்தன் அவர்களின் ஏற்பாட்டில் மையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளரும்...

மட்டு. பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று, மற்றும் மண்முனை தென் எருவில்பற்று ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக பட்டிருப்பு கல்வி வலயம் இயங்கி வருகின்றது. எமது கல்வி வலயத்தில் 23,338 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றார்கள். 1638 ஆசிரியர்கள் எமது கல்வி வலயத்தில் கல்வி புகட்ட வேண்டும் அதில் 278 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளது. விசேடமாக கணிதபாட...

வீதியின் பாலத்தினை உடைத்து விபத்துக்குள்ளான கார்..!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் நேற்றைய தினம் பி.ப 5.45 மணியளவில் வேக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தினை உடைத்து நீரோடையில் விழுந்துள்ளது. இதன்போது காரில் பயணித்தவர்கள் காயங்களுடன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். தையிட்டி விகாரை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – அன்ரனிசில் ராஜ்குமார்..! 

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை,  மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேச்சல்தரை பிரச்சினைகளான தமிழர்களுக்கான தீர்வுளை ஜனாதிபதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுடன் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிடில் இனங்களுக்கிடையே பாரிய முறுகல் நிலை ஏற்படும். இதனால் மீண்டும் இன மத கலவரங்களால் இரத்த ஆறு ஒடும் வாய்ப்புக்கள் உள்ளது...

விசேட தேவையுடைய மக்களின் நலன் கருதி வீடுகள் கையளிப்பு..!

பெரிய பிரித்தானியா லண்டனை மையமாக கொண்டு இயங்கும் மட்டக்களப்பு  நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் பட்ஸ் யுகே (BUDS UK) அமைப்பின் இலங்கையான மட்டக்களப்பை மையமாக  கொண்டு இயங்கும்  BUDSBT என்பன இணைந்து நலிவுற்ற மற்றும் விசேட தேவை உடைய மக்களின் நலன் கருதி நிர்மாணித்த 6 வீட்டுத்திட்டங்களின் இரண்டாம் கட்டமாக நிர்மாணிக்கப்பட்ட 3 வீடுகளை  அமைப்பின்...

வயல்நிலங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்..!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று, பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி ஆனைகட்டியவெளி வயல் கண்டங்களுக்குள் இன்றைய தினம் (12.02.2025) அதிகாலை நேரத்தில் புகுந்த காட்டுயானைகள் பல ஏக்கர் வயல்நிலங்களை சேதப்படுத்தியுள்ளதுடன் இப்பகுதி மக்கள் தொடர்ந்து யானைகளின் அச்சுறுதலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது செய்கைபண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்டிருந்த...

மின்சாரம் இல்லாமல் அவதியுறும் மக்கள் – அதிகாரிகள் அசமந்தம்..!

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள கல்லடிவெட்டை, கானாந்தனை மற்றும் அதனையண்டிய பகுதிகளிலுள்ள  சில  கிராமங்களுக்கு செல்லும் அதிஉயர் மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்ததனால்  மின்சார கம்பிகள், அறுந்து நிலத்தில் கிடப்பதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கிவருவதாக பொது மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த 2024...

மின்சார கம்பிகளை திருட முயன்ற இளைஞன் மின்சாரம் தாக்கி படுகாயம்..!

மட்டக்களப்பு திருப்பெரும்துறை வீதியிலுள்ள கொத்துக்குளம் மாரியம்மன் கோவில் முன்னாள் அமைந்துள்ள அதிஉயர் மின்சாரத்தை கட்டுப்படுத்தும்  கட்டிடப்பகுதியில் உள்நுளைந்து மின்சார கம்பிகளை திருட முற்பட்ட திருடன் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை (06/02/2025) காலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் மின்சாரசபையினால் அதிஉயர்வான 3300 சக்தி...
- Advertisement -spot_img

Latest News

கனமழை குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை...
- Advertisement -spot_img