Thursday, October 1, 2026
No menu items!

மண்சரிவு

ஆபத்தை எதிர்கொள்ள போகும் நான்கு மாவட்டங்கள்..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எல்ல - நமுனுகுல தொழிற்சாலைப் பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்...

சில மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை !

பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான பிரதேச செயலகப் பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதேவேளை மாதுரு ஓயா, ஹத்தா ஓயா மற்றும் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பசறை பகுதியில் பாரிய மண்சரிவு!

பதுளை - செங்கலடி பிரதான வீதியின் பசறை - 13 ஆம் கட்டை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், குறித்த மண்சரிவினை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பாரிய கற்களும் மரங்களும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை !

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இதன்படி நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 76,218 பேர் பாதிப்பு…!

சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 16,707 குடும்பங்களைச் சேர்ந்த 68,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த நிலைமை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக...

சீனாவின் ஷங்காய் நகரத்தை தாக்கிய சூறாவளி!

பல வருடங்களுக்கு பின்னர் சீனாவின் ஷங்காய் நகரத்தை திங்கட்கிழமை (16) அதிகாலை சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து பாரிய காற்றும் வீசியதோடு, பலத்த மழையுடன் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கிருந்து 400,000 க்கும்  அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்தோடு,  விமானங்கள், படகுகள் மற்றும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் மூன்று நாள் இலையுதிர்கால கொண்டாட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஷாங்காய்க்கு தென்மேற்கே...

அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்க நடவடிக்கை…

இந்தியா, கேரளா வயநாட்டில் கடந்த 30ஆம் திகதி திடீரென ஏற்பட்ட மண்சரிவினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ள நிலையில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 67 பேரின் உடல்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போயுள்ளன. இதன் காரணமாக 67 பேரின்...

கேமி புயலால் அதிகரித்த உயிரிழப்பு…!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட மண்சரிவால் கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், காணாமல் போன 35 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேமி புயல் சீனாவை...

மண்சரிவில் சிக்கி இலங்கையர் இருவர் உயிரிழப்பு…

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவந்த கன மழை காரணமாக வயநாடு பகுதியில் அடுத்தடுத்து மண்சரிவு ஏற்பட்டு 200 இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களில் இரு இலங்கையர்கள் அடங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஏற்பட்ட பாரிய விபத்து…

ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங் நகரிலுள்ள யூலின் கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கிராமத்தையொட்டிய மலையில் ஏற்பட்டத் திடீா் வெள்ளம் காரணமாக மண்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கமைய சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த 300-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளா்கள், காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த மண்சரிவில் 15 போ் உயிரிழந்ததாகவும், 6 போ் காயமடைந்ததாகவும்...
- Advertisement -spot_img

Latest News

நான்கு மாதங்களின் பின்னர் வெளிநாட்டு நடப்பு இருப்பில் மிகை நிலை

இலங்கையின் வெளிநாட்டு நடப்புக் கணக்கு, தொடர்ச்சியாக நான்கு மாத பற்றாக்குறைக்குப் பின்னர், 2026 ஓகஸ்ட் மாதத்தில் மீண்டும் மிகை நிலையை வெளிப்படுத்துவதாக  இலங்கை மத்திய வங்கி...
- Advertisement -spot_img