Thursday, April 30, 2026
No menu items!

மலையகம்

மலையகத்தில் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரிப்பு..!

மலையகத்தில் கடந்த சில நாட்களாகபெய்து வரும் கடும் மழையால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் சனிக்கிழமை (19) காலை முதல் நிரம்பி வழிகின்றது. அத்துடன், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல்லே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. எனவே, தாழ்நிலப் பகுதிகளில்...

தடம்புரண்ட தொடருந்து…!

மலையக மார்க்கதிலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்து  தெமோதரை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதன் காரணமாக  மலையக மார்க்கதிலான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த தொடருந்தை வழித்தடமேற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது.

செந்தில்தொண்டமானை சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்..!

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரும் சட்ட அமைச்சருமான காசிவிசுவநாதன் சண்முகம் கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தமாக கொழும்பில் சந்தித்துள்ளார். இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கான நட்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சிங்கப்பூர் முதலீட்டாளர்களை கிழக்கு மற்றும் மலையத்தில் முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலின் போது சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம்...

மலையக ரயில் தடம்புரண்டது : சேவைகளில் பாதிப்பு

பதுளை மற்றும் ஹாலி-எல ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை  (29) சேவையிலிருந்த ரயில் தடம் புரண்டதால், மலையக  ரயில்  சேவைகள்  தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி  ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. பொடிமனிக்கே ரயிலின் என்ஜின் பகுதியும் பின்பெட்டியுமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. மேலும், அப்பகுதியில் நிலவும் மோசமான காலநிலை மற்றும்  ரயில்ப்பாதையில் சேறும் சகதியுமாக காணப்படுவதால், ரயில்வே போக்குவரத்தில் தடைகள்...

மலையக விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் நியமனம்

மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவினால் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நியமனக் கடித்தத்தில் மலையகத் தமிழர்களை இலங்கைச் சமூகத்தில் முழுமையாக இணைத்துக்கொள்வது குறித்து அறிக்கையிடுவதற்கான பொறுப்பும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவர் பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான நலன்புரி விடயங்கள், மகளிர் மேம்பாடு, சிறுவர்  நலத்திட்டங்கள்,தமிழ் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து பாடசாலை   சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட  ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரான வடிவேல் சுரேஷ் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img