சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த  24 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரின் பயணப் பையில் 30,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 150 சிகரெட் அட்டைப் பெட்டிகளை மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here