Saturday, November 7, 2026
No menu items!

முச்சக்கர வண்டி

 அளுத்கமவில் 13 சிறுவர்களை ஏற்றிச்சென்ற  முச்சக்கர வண்டி ஒன்று விபத்து !

அளுத்கம – பின்ஹேன குருகந்த பகுதியில் 13 சிறுவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானது. குறித்த பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்துக்கு சொந்தமான முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்களை அதிக வேகமாக பாடசாலைக்கு அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த 13 சிறுவர்களும், முச்சக்கரவண்டியின் சாரதியும் பேருவளை வைத்தியசாலையில்...

முச்சக்கர வண்டி ஒன்று எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதி விபத்து!

இன்று (02) காலை அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று ரஜரட்ட குயின் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதியது. இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்தவர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஆவார். இந்த முச்சக்கர வண்டி பெலியத்தயிலிருந்து வவுனியா நோக்கிச்...

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமா?

அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைத்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றத்தை அறிவிக்க முடியாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர, ஒவ்வொரு சங்கமும் முச்சக்கர வண்டி கட்டணத்தை அறிவிக்க அனுமதிக்காமல், அரசாங்கமே அதை தீர்மானிக்க வேண்டும் என்றார். "பெட்ரோல் விலை குறைந்துள்ளது. முச்சக்கர...

பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்!

அஹுங்கல்லவில் உள்ள ஒரு பாடசாலைக்கு  அருகில் முச்சக்கர வண்டியில் வந்த நபரொருவர் 28 வயதுடைய  இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டில்  காயமடைந்த குறித்த இளைஞர் பலபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியொன்று தனியார் பேருந்துடன் மோதி விபத்து!

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று தனியார் பேருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், படுகாயமடைந்த மூன்று பேர் கண்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இதில் ஒரு பள்ளி...

ரயில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து ; இருவர் பலி!

இன்று (12) காலை அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், கொஸ்கம, அளுத்தம்பலம் ரயில் கடவையில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் கடவை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​முச்சக்கர வண்டி ரயிலில் மோதியதில், முச்சக்கர வண்டியின் இயந்திரம் கழன்று பல மீட்டர்...

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமா?

எரிபொருள் விலைகள் குறைந்திருந்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டி கட்டணங்களைக் குறைப்பதை விட, முறையான ஒழுங்குமுறை மூலம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்க அரசாங்கம் தலையிட வேண்டும் என்று அதன் தலைவர் லலித்...

சாரதியின் தூக்க கலக்கத்தால் ஏற்பட்ட விபத்து – பெண்ணொருவர் பலி..!

கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவின் தம்மென்னாவ - உப்புல்தெனிய வீதியின் கட்டுகெலியாவ பகுதியில், சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கொன்கிரீட் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி, பெண் ஒருவர் மற்றும் பின் இருக்கையில் இருந்த இரண்டு ஆண்கள், அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்களினால் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்!

நாட்டில் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, விபத்துக்கள்  மற்றும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. விபத்துக்களில் சிக்கும் பல வெளிநாட்டவர்களிடம் முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் இருப்பது விசாரணையில்  தெரிய வந்துள்ளது. முறையான பயிற்சி இல்லாததே இந்த விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமாக உள்ளது. இலங்கையில் சட்டபூர்வமாக...

எவ்வித அச்சமுமின்றி சடலத்தை வீதியில் விட்டுச் சென்ற நபர்..!

நேற்று (21/03/2025) காலை 11.45 மணியளவில், வெல்லம்பிட்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட வெலேவத்த, ரம்யவீர மாவத்தைக்கு அருகில் முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், உயிரிழந்த நபர் ஒருவரை வீதிக்கு அருகில் விட்டுச் சென்றுள்ளனர். அந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ள வீட்டின் உரிமையாளரிடம், அந்த நபர் அதிகமாக மது அருந்திவிட்டு மயக்கமடைந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும்,...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img