Saturday, November 7, 2026
No menu items!

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் கொண்டும் செல்லும் பணி !

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில்137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திலிருந்து இன்று (20.09.2024) காலை 7 மணி முதல்  வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகிய ஆசிரியர் !

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகிய ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு  வீதியால்  பாடசாலைக்கு  சென்று கொண்டிருந்த போது  புதுக்குடியிருப்பு கள்ளியடி பாலத்தடியில் இரண்டு யானை  வீதியை வழிமறித்து ஆசிரியரின்  மோட்டார் சைக்கிளை தூக்கி  எறிந்ததோடு குறித்த ஆசிரியரையும்  தாக்கிவிட்டு சென்றுள்ளது. அதனையடுத்து தாக்குதலுக்கு...

32 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது..!

முல்லைத்தீவு மற்றும் மன்னார் பகுதிகளிலிருந்து மீன்களை ஏற்றிச் செல்வதாகக் கூறி அதி குளிரூட்டப்பட்ட லொறியில் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இருவர் கொழும்பு மோதர ராஜமால் வத்தை மகப்பேறு வைத்தியசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக கொழும்பு வடக்குப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மீன் வியாபாரி எனவும்...

குத்துச்சண்டை போட்டியில் முதலாம் இடத்தை பெற்று மாணவன் சாதனை!

வட மாகாண ரீதியில் குத்துசண்டை போட்டியில் முதலாம் இடத்தை பெற்று மடு கல்வி வலய மாணவன் சாதனை படைத்துள்ளார். வடக்கு மாகாண பாடசாலை ரீதியாக 20 வயது பிரிவில் குத்துசண்டை போட்டியில் பங்கு பற்றிய பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய மாணவன் விஜிதன் கபிலன் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார். கடந்து 17 மற்றும் 18 -...

இடைநிறுத்தப்பட்ட ரிஷாட் பதியுதீனின்  திட்டங்கள்..!

ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனால் ஆறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த 200 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய மேலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய ஆறு மாவட்டங்களில்...

பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்ப்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது முன்னதாக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்ப்பாளர் பா.அரியநேந்திரன் அவர்கள் முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி அதன்பின்னர் முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும்...

பள்ளிச் சிறார்கள் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை வளாகத்தில் மாணவர்களுக்கு  உணர்வுபூர்வ  அஞ்சலி!

செஞ்சோலை வளாகத்தில்  ஸ்ரீலங்கா இராணுவத்தின்  விமானப்படையினரின் மிலேச்சத்தனமான வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட  மாணவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று இன்றையதினம்(14) செஞ்சோலை வளாகத்தில்  உணர்வுபூர்வமாக இடம்பெற்றது . முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ம் ஆண்டு தலைமைத்துவ  பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த இராணுவ சிப்பாய்!

முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் இராணுவ சிப்பாயொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்றைய தினம் (07) அதிகாலை நடைபெற்றுள்ளது. கேப்பாபிலவு பகுதியிலுள்ள ஆறாவது காலாட்படையில் கடமையாற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய லான்ஸ் கோப்ரல் நிலையுடைய சிப்பாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவரது உயிரிழப்பு தொடர்பில் இராணுவ பொலிஸார்...

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காட்டு யானை உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கேப்பாபிலவு புதுக்குடியிருப்பு வீதியில் கள்ளியடி வயல் வெளிப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் இனம் காணப்பட்டுள்ளது. சுமார் 15 தொடக்கம் 20 ற்கும் இடைப்பட்ட வயதுடைய யானையே இவ்வாறு உயிரிழந்து காணப்படுகின்றது. யானையின் உயிரிழப்பு தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு சென்றவனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் புதுக்குடியிருப்பு...

முல்லை கலைஞர்களின் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து !

முல்லைத்தீவு கலைஞர்கள் முல்லைமோடி நடையில் நடித்து வரும் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேற்றப்படவுள்ளது. மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் பிள்ளையார் ஆலயத்தின் திருவிழாவினை முன்னிட்டு கிழக்கு பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் உள்ளுர் கலைகளுக்கான விழா கடந்த 31.07.2024 மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தினால் பாரம்பரிய அரங்காற்றுகைகளும்,காட்சிப்பொருளும் என்ற தொனிப்பொருளில்...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img