முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தப் பேரவலம் இடம்பெற்று 16 ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் நிலையில், பிரித்தானியா – லண்டன் நாடாளுமன்ற சுற்று வட்டப் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இறுதி யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட போர் குற்றங்களையும், துன்புறுத்தல்களையும் கண்டித்தும், சர்வதேச விசாரணையைக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








