Friday, June 5, 2026
No menu items!

மேன்முறையீட்டு நீதிமன்றம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளின் பட்டியல் வெளியீடு!

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி நிலவரப்படி 2024 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளின் பட்டியலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இவர்களில் ஒரு முன்னாள் அமைச்சர், நான்கு முன்னாள் மாகாண ஆளுநர்கள், ஆறு முன்னாள் இராஜாங்க...

506 BYD மின்சார வாகனங்களை விடுவிக்க சுங்கம் ஒப்புதல்!

தடுத்து வைக்கப்பட்டுள்ள 506 BYD ரக மின்சார வாகனங்களை மேலதிக வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பித்த பிறகு விடுவிக்க இலங்கை சுங்கம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. வாகனங்களை இறக்குமதி செய்த நிறுவனத்தின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த இணக்கம் அறிவிக்கப்பட்டது.

வைத்திய ஆய்வக உடலியக்க வியளாலர்கள் நியமனங்கள் தொடர்பில் இடைக்கால உத்தரவு!

இணை சுகாதாரத் துறைக்கு அமைவான வைத்திய ஆய்வக உடலியக்க வியளாலர்கள் நியமனங்கள் வழங்குவதைத் தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றைய தினம் (27) இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த மனு மீண்டும் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனவும் அந்த திகதி வரை இந்த நியமனங்கள் வழங்குவது தொடர்பில் தற்போதைய நிலையே தொடரும் என்றும்...

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு எதிராக தாக்கல்செய்த   ரிட் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது தாஹிர் லாஃபர் மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு இன்று இந்த தீர்ப்பை அறிவித்தது. ஜனாதிபதியின் தலைமைப்...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் வெளியான தகவல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முன்னர் நிராகரிக்கப்பட்ட 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அதன்படி, வேட்புமனுக்களை ஏற்க சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ளனர். கடந்த வாரம், உள்ளாட்சித் தேர்தலுக்கான 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. 2025 உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தீர்ப்புகளை மேல்முறையீட்டு நீதிமன்றம்...

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனு தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பு இன்று!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகத் தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி இணைத்தல், சத்தியக் கடிதம் தொடர்பான பிரச்சினை மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல் தொடர்பான பிரச்சினை என்பவற்றால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தமது தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது. குறித்த நிராகரிக்கப்பட்ட மனுக்கள்...

சட்டத்தரணி பி.உதயங்கனியை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி பி.உதயங்கனியை உடனடியாக விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட உதயங்கனியை உடனடியாக விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணி உதயங்கனி ஏப்ரல் 28 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ அமரசூரிய தாக்கல் செய்த மனுவை...

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு !

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி மொஹமட் லபார் தாஹிர் தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து சட்டத்தரணிகளும் மற்றும் தனிநபர்களும் நீதிமன்ற...

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய செயல்தலைவர் நியமனம்!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியான மொஹமட் தாஹிர் லஃபர் அதன் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நீதியரசர் பந்துல கருணாரத்னவின் ஓய்வுக்கு முந்திய விடுமுறையைத் தொடர்ந்து அவர் நேற்று (2) 2025 ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி புதிய செயல் தலைவர் நியமிக்கப்படும் வரை இந்த நியமனம் அமுலில் இருக்கும்.  

பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மீது மனு தாக்கல்!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா சமர்ப்பித்தார். அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

கோட்டாவின் பயணத் தடை; மன்னிப்பு கோரிய தேரர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை குறித்துத் தான் தெரிவித்த கருத்துகளுக்காக தினியவல பாலித தேரர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். ஊடகங்களுக்கு...
- Advertisement -spot_img