Tuesday, November 10, 2026
No menu items!

யாழ்ப்பாணம்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு!

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில்  முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு கொக்குவில் சந்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தினை வழங்கி ஜனாதிபதி...

அச்சுறுத்தலுக்குள்ளாகிய நோயாளி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பிலான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரான தம்பி ஐயா கிருஷ்ணானந்த் யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து...

தொடர்ச்சியாக டீசல் திருடிய கும்பல் !

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் புகையிரதத்தில் தொடர்ச்சியாக டீசல் திருடிய கும்பல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இரவு வேளையில் புகையிரதம் தரித்து நின்றபோது கடந்த 9ஆம் திகதி இனந்தெரியாத குழுவொன்று திருட்டில் ஈடுபட்ட சமயம், புகையிரத நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளால் குறித்த சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இதன்போது திருட்டில் ஈடுபட்ட கும்பல் தப்பிச்சென்ற நிலையில்...

மன்னார் நாவற்குழி A-32வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

மன்னார் நாவற்குழி A-32வீதியின் பூநகரி பரமன்கிராய் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச்சேர்ந்த 27வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு சென்று விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர். எனினும் விபத்திற்கான காரணம் தொடர்பாக பூநகரி பொலிசார் விசாரணைகளை...

பிக்குகளின் வாகனத்தை உள்நுழைய அனுமதித்தமை சர்ச்சை..!

நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலய சுற்று வீதியில் வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சில பிக்குகள் வாகனத்துடன் நுழைந்தமையால் சர்ச்சை எழுந்துள்ளது. நல்லூர் கந்தசாமி கோவில் பெருந்திருவிழா காரணமாக வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசாமி ஆலய முன்பக்கம் வரை பௌத்த பிக்குகளின் வாகனம் உள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது. சாதாரண...

சந்நிதியான் ஆச்சிரம பெருந்திருவிழா கால விசேட ஆன்மீக சொற்பொழிவு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு  செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த 6ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் பெருந்திருவிழா கால ஆன்மீக  சொற்பொழிவில் நேற்றைய தினம் 09/08/2024  “திருமந்திரத்தில் வாழ்வியல் சிந்தனைகள்”  தலைப்பில் அருளுரையினை  சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்  பேரவை உறுப்பினரும், ஆசிரியருமான  சத்தியநாதன்...

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனமும் (The Srilanka - Canada Business Council) யாழ்ப்பாண வணிகர் கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை  கைச்சாத்திட்டுள்ளனர். பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் குறித்த ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது. இதன்போது யாழ்ப்பாண வணிகர் கழகம், யாழ்ப்பாண முகாமையாளர் நிறுவணம், யாழ்ப்பாண முகாமைத்துவ கழகம்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்…!

வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (09) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது. 18 ஆம் திகதி மஞ்சமும், 31 ஆம் திகதி சப்பரமும், செப்டம்பர் 1 ஆம் திகதி தேர்த் திருவிழாவும், செப்டம்பர்...

வீடுகள் மீது தாக்குதல் நடத்தி எரித்த சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி எரித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு வாள், நான்கு பெற்றோல் குண்டுகள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள...

லெப்டினன்ட் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவவின் 32 ஆவது நினைவு தினம்!

லெப்டினன்ட் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவவின் 32 ஆவது நினைவு தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் அராலித்துறையில் உள்ள கொப்பேகடுவவின் நினைவிடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது டென்ஸில் கொப்பேகடுவ உள்ளிட்ட உயிரிழந்த முப்படையினருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி சந்தன விக்கிரமசிங்க உள்ளிட்ட முப்படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர்...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலை; ஹட்டன் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

மத்திய மலைநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹட்டன் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்...
- Advertisement -spot_img