Tuesday, April 21, 2026
No menu items!

வனஜீவராசிகள்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 13 யானைகள் சிகிச்சையில் – வனஜீவராசிகள் திணைக்களம் தகவல்!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 13 யானைகள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 'பாத்திய' என்றழைக்கப்படும் யானை உயிரிழந்ததை அடுத்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வனவிலங்கு சுகாதார பணிப்பாளர் தாரக பிரசாத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, அனுராதபுரத்தில் 7 யானைகளும், பொலன்னறுவையில்...

கடல் பசு இறைச்சியுடன் மன்னாரில் ஒருவர் கைது!

மன்னார், வங்காலை அக்னேஷ்புரத்திலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கடல் பசு இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் வங்காலை , அக்னேஷ்புரத்தில் வசிக்கும்...

வன விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை இன்று முன்வைப்பு!

பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விலங்குகள் தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை இன்றைய தினம் கிடைக்கவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகசந்திப்பில் வைத்து விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார் அவ்வாறு கிடைக்கப்பெறும் அறிக்கை முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட அறிக்கையாகக் கருத்திற்கொள்ளப்படமாட்டாது. இது குறித்த கணக்கெடுப்புகள் மீண்டும்...

இறந்த நிலையில் கரையொதுங்கிய ஆமைகள்!

அம்பாறை மாவட்டம் மருதமுனை –பாண்டிருப்பு பகுதிகளில் இன்று (20) இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று காலை உயிரிழந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர். இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார் 3 அடி நீளமும் 25 தொடக்கம் 50 கிலோ கிராம் எடை இருக்குமென...

சுற்றாடல் அமைச்சின் காரியாலயத்தில் காணப்பட்ட தந்தங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

சுற்றாடல் அமைச்சின் காரியாலயத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெறுமதியான ஒரு ஜோடி தந்தங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் விஜித ஹேரத், சுற்றாடல், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் என்ற வகையில், தந்தங்களை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சூரியபண்டாரவினால் நேற்று உத்தியோகபூர்வமாக இந்த யானைத் தந்தங்கள் திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன.  

கரடி தாக்குதலுக்கு இலக்காகி ஐந்து பேர் காயம்!

பொலன்னறுவை, கிம்புலாவல, தியபெதும பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கரடி தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தியபெதும பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், இந்த கரடியை வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img