Wednesday, June 10, 2026
No menu items!

வருமானம் மற்றும் செலவு அறிக்கை

வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கை குறித்த விழிப்புணர்வு திட்டம்..!

வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக, வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைத் தயாரித்து சமர்ப்பிப்பதில் கவனம் செலுத்தும் தொடர்ச்சியான விழிப்புணர்வு திட்டங்கள் தொடங்கப்பட்டன. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது இந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய ஏராளமான நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டம் தீவின்...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்..!

கடந்த பொதுத் தேர்தலில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பிலான தகவல் அடங்கிய ஆவணத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறை நிலையங்களுக்கு அனுப்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்பின்னர், காவல்துறையினரால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்..!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர் இன்னமும் தமது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.  இவர்களது பெயர் பட்டியலை பொலிஸாரிடம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸார் இவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கையை எடுப்பார்கள் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்த வேட்பாளர்களின் பட்டியல் மாவட்ட...

பகிரங்கப்படுத்தப்படும் வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கை..!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் இன்று முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றுடன் தொடர்புடைய அறிக்கைகள் அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்திலும் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு...

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கை வெளியீடு!

2024ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் திகதியுடன் முடிவடையும் காலக்கெடுவின்படி ஒப்படைக்கப்பட்ட 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளின் தொகுப்பை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 8361 வேட்பாளர்களிடமிருந்து மொத்தம் 7412 வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சுயேச்சை...

பொதுத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் இன்று நிறைவு..!

இந்த முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 8,361 வேட்பாளர்களில் இதுவரை 1,985 பேர் மாத்திரமே வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 690 அரசியல் கட்சிகள்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img