Friday, November 13, 2026
No menu items!

வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றைய நாளுக்கான வானிலை..!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற இடங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். மேல்,...

பல மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்க எச்சரிக்கை..!

ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று இரவு 11.00 மணி வரை அமலில் உள்ள இந்த எச்சரிக்கையின்படி, 21 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 04 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை மாவட்டங்களுக்கும் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பலத்த மழையுடனான வானிலை காரணமாக  பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று பிற்பகல் 2...

கனமழை குறித்து வளிமண்டலவயில் திணைக்களம் எச்சரிக்கை!

கனமழை குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவயில் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இவ்வாறு கனமழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை நிலைமை நாடு முழுவதும் படிப்படியாக நிலைப்பெற்று வருகிறது. இதன் தாக்கத்தால், நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை...

இன்றைய நாளுக்கான வானிலை!

நாடு முழுவதிலும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய ,சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களில்  அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமத்திய மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது...

அனர்த்த நிலைமைகளில் 24 மணி நேரமும் இயங்கும் துரித அழைப்பு இலக்கம்..!

எதிர்வரும் நாட்களில் பலத்த மழையினால் திடீர் அனர்த்த நிலைமைகள் ஏற்படுமாயின், அதற்கு முகங்கொடுப்பதற்காகச் சகல மாவட்டங்களிலும் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. அனர்த்த நிலைமைகள் தொடர்பான விடயங்களை, 24 மணி நேரமும் இயங்கும் 117 என்ற துரித அழைப்பு இலக்கத்துக்கு மும்மொழிகளிலும் அறிவிக்க முடியும் என, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி...

வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்..!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (13) மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும்,...

இன்றைய நாளுக்குரிய வானிலை..!

அம்பாறை, மட்டக்களப்பு , பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய மற்றும்  ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி...
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேரர் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல்

அனுராதபுரம் ருவன்வெலி சாய அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உட்பட 7 பேரை நவம்பர் 26 ஆம்...
- Advertisement -spot_img