Saturday, June 13, 2026
No menu items!

வாக்காளர்

தேர்தல் பிரசாரத்துக்காக செலவிடக்கூடிய தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில்..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பிரசாரத்துக்காக வாக்காளர் ஒருவருக்குச் செலவிடக்கூடிய தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின்படி, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 5 நாட்களுக்குள் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவர் வாக்காளருக்காகச் செலவிடக்கூடிய...

மன்னாரில் வாக்காளர்களுக்கு வழங்க என கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் பொலிஸாரால் மீட்பு…

மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால்  வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் புதன்கிழமை(13.11.2024) மாலை மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளதோடு மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார் - யாழ் பிரதான வீதியில் ...

பேருந்து சேவைகள் வழமை போன்று இயங்கும்!

வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வாக்காளர்களின் வசதிக்காக பேருந்து சேவைகள் வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அனைத்து டிப்போ பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல் பணிகளுக்காக 1,300 பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், தனியார் பஸ் சேவைகள் குறிப்பிட்ட அளவு வரை மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார்...

வாக்காளர்கள் மற்றும் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய வேண்டும்; பஃப்ரல் அமைப்பு…!

இலங்கையில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மாத்திரமே. அதன்படி, வாக்குகளை வழங்கவுள்ள வாக்காளர்கள், தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் குறிப்பிட்ட நாட்களில் ஆராய வேண்டும் என பஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. வரப்பிரசாதங்கள் அல்லது தற்காலிக சலுகைகள் தொடர்பில் சிந்திக்காது பொருத்தமான நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் நோக்கில் வாக்காளர்கள் செயற்பட வேண்டும்...

இரண்டாம் கட்ட வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகள் 51 சதவீதம் நிறைவடைந்துள்ளதுடன் இரண்டாம் கட்ட வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக மீண்டும் 14 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதுவரையில் வாக்காளர் அட்டைகளை பெறாதவர்கள் அன்றைய...

தேர்தல் செலவு குறித்து முடிவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளர் ஒருவருக்கு எவ்வளவு தொகை செலவிட முடியும் என்பது தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL) அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்படும் என பெஃப்ரல் அமைப்பின்...

சுமார் 40 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தொடர்பில் வெளியான ஆய்வுத் தகவல்கள்…!

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் காணப்படக்கூடிய வாக்காளர்களில் சுமார் 40 இலட்சத்துக்கும் அதிகமானோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது யாருக்கு என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என அரசாங்கத்தின் உளவுத்துறை நடத்திய ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்க உளவுத்துறை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், கடந்த தினங்களில் இரகசியமாக வீட்டிற்கு வீடு சென்று நடத்திய ஆய்வில்...

இலங்கையில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வாக்காளர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி இறுதி...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img