வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வாக்காளர்களின் வசதிக்காக பேருந்து சேவைகள் வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அனைத்து டிப்போ பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகளுக்காக 1,300 பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், தனியார் பஸ் சேவைகள் குறிப்பிட்ட அளவு வரை மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை சுமார் 3000 பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில் பயணமும் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.







