Tuesday, June 23, 2026
No menu items!

விடுமுறை

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாகாண ஆளுநர்கள் இந்த விடுமுறை தினத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படும் அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும், எதிர்வரும் சனிக்கிழமை (25) பாடசாலைகளை நடத்துமாறு...

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளி விடுமுறை அறிவிப்பு!

மத்திய மாகாணம் முழுவதிலும் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி (தீபாவளி பண்டிகைக்கு மறுநாள்) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மத்திய மாகாண ஆளுநர் வழங்கியுள்ளார். விடுமுறை அறிவிப்பிற்காக நுவரெலியா கல்வி வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் எம். கணேஸ்ராஜ் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வழங்கிய...

சுகாதார அமைச்சில் விடுமுறை அனுமதிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் அதிக அளவில் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளுக்கான அனுமதிகளை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வெளியிட்ட சுற்றறிக்கையில், சுகாதார மற்றும்...

வவுனியாவில் அறிமுகமாகும் தடை!

வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது  வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புக்களைக்...

எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு விடுமுறை..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம், பல்கலைக்கழகங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. அத்துடன், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் குறித்த தினத்தில்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், வளாகங்கள் மற்றும் நிறுவகங்களில் பயிலும் இளமாணி மற்றும் பட்டமேற்க் கல்வி மாணவர்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள்...

37 பாடசாலைகளுக்கு விடுமுறை!

'சிறி தலதா விஸ்டாஸ்' கண்காட்சியை முன்னிட்டு கண்டி நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 37 பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க கண்டி வலய அலுவலகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, கண்டி பிராந்திய கல்விப் பணிப்பாளர் மதுபானி பியசேன, ஊடகமொன்று வினவியபோது, ​​ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 05...

15 ஆம் திகதி விடுமுறை தினம் அல்ல – பரவும் போலிச் செய்தி..!

எதிர்வரும் 15 ஆம் திகதி விடுமுறை தினம் என சமூக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் அவ்வாறான ஒரு தீர்மானத்தை இதுவரை எடுக்கவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களம் ஊடக அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை..!

ரமழான் பண்டிகைக்காக அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31 ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலதிகமாக ஏப்ரல் முதலாம் திகதியும் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு  தீர்மானித்துள்ளது.

பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை..!

நாடளாவிய ரீதியில் வடக்கு, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மஹா சிவராத்திரி விரதம் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு இவ்வாறு விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சுகள் அறிவித்துள்ளன. இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய...
- Advertisement -spot_img

Latest News

கொட்டாவ, மகரகம பகுதிகளில் 24 மணி நேர நீர் வெட்டு!

லபுகம மற்றும் களத்துவாவவிலிருந்து மகரகமைக்கு நீர் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (24) மாலை முதல் பல பகுதிகளுக்கு...
- Advertisement -spot_img