மத்திய மாகாணம் முழுவதிலும் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி (தீபாவளி பண்டிகைக்கு மறுநாள்) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை மத்திய மாகாண ஆளுநர் வழங்கியுள்ளார்.
விடுமுறை அறிவிப்பிற்காக நுவரெலியா கல்வி வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் எம். கணேஸ்ராஜ் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வழங்கிய வேண்டுகோளும் பின்பற்றப்பட்டுள்ளது.
விடுமுறைக்குப் பதிலாக, பாடசாலைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை கல்விச் செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு மத்திய மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.








