விபத்து
உள்நாட்டுச்செய்திகள்
கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு…!
ஹுங்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் வேலைத்தளத்தில் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற வாகனத்திலிருந்து கண்ணாடியை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர், கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
ஹுங்கம மேற்கு பகுதியை சேர்ந்த 45 வயது நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வரும்...
உள்நாட்டுச்செய்திகள்
ரயிலில் மோதி மூவர் பலி…!
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (12.10) பிற்பகல் குறித்த மூவரும் ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது.
இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது குழந்தை காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மூவரும்...
உள்நாட்டுச்செய்திகள்
வீதியில் விழுந்து கிடந்த நபர் மீது மோதிய கார்…!
ஹெட்டிப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துத்திரிபிட்டிகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹெட்டிப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுகவெல பிரதேசத்தை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் விழுந்து கிடந்த நபர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, வீதியில் விழுந்து கிடந்த நபர் காயமடைந்துள்ள நிலையில் ஹெட்டிப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...
புதிய செய்திகள்
விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் ரயில்; 19 பேர் படுகாயம்…!
இந்தியா - மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில், 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேற்று இரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோதே, சரக்கு ரெயில் மீது மோதி குறித்த ரயில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இரண்டு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. தடம்புரண்ட...
உள்நாட்டுச்செய்திகள்
யாழ்.வல்வை பாலத்துக்கு அருகில் விபத்து; ஒருவர் பலி…!
யாழ்ப்பாணம் - வல்வை பாலத்துக்கு அருகில் இன்று (12.10) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள், பட்டா வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை, முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் பட்டா வாகன சாரதியை...
உள்நாட்டுச்செய்திகள்
இரு பேருந்துகள் மோதி விபத்து; 18 பயணிகள் காயம்…!
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இன்று (11.10) காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 18 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
அதன்படி, இன்று காலை 8.15 மணியளவில் கொழும்பு – கண்டி வீதியில் உதுவான்கந்த, வலகடயாவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான இரண்டு பேருந்துகளும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
விபத்தில்...
உள்நாட்டுச்செய்திகள்
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…!
கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று (11.10) காலை இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்த 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி...
உள்நாட்டுச்செய்திகள்
இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; பெண் பலி…!
அவிசாவளை - கொழும்பு வீதியில் பாதுக்க மாவத்தகம கொடிகஹகந்த மாவத்தைக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பாதுக்க பொலிஸார் இன்று வியாழக்கிழமை (10.10) தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிள்களும் பஹத்கமையில் இருந்து மீபே நோக்கி பயணித்துள்ளதுடன், அதே...
உள்நாட்டுச்செய்திகள்
அநுராதபுரம் வீதியில் விபத்து….!
பாதெனிய - அநுராதபுரம் வீதியில் தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு பஸ்ஸை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது, இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.
புதிய செய்திகள்
ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!
வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் நேற்று (18.09.2024) மாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
ஏ9 வீதி ஊடாக வவுனியா நோக்கி வந்த மோட்டர் சைக்கிள் ஓமந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தடியில்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


