Tuesday, June 23, 2026
No menu items!

வியட்நாம்

குறைவடைந்துள்ள கோப்பி விலை!

உலகளவில் கோப்பி விலை வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. இது அமெரிக்கா விதித்த புதிய வரிகளால் ஏற்படுகிறது. உலகின் முன்னணி கோப்பி உற்பத்தியாளரான வியட்நாம் மீது விதிக்கப்படும் வரி விகிதம் 46% ஆகும். தொடர்புடைய வரிகள் நடைமுறையில் இருந்தால், அமெரிக்காவிற்கு வியட்நாமிய கோப்பி இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

யாகி சூறாவளி காரணமாக 220 பேர் பலி!

யாகி சூறாவளி காரணமாக மியன்மாரில் இதுவரை 220 பேர்வரை உயிரிழந்ததாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 80 பேர் தேடப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் இச் சூறாவளியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.

வியட்நாமில் யாகி (Yagi) புயலினால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வியட்நாமில் யாகி (Yagi) புயல் அனர்த்தத்தினால் பலியானோர் எண்ணிக்கை தற்போது 197 ஆக உயர்ந்ததாக அந்த நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. 128 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புயலில் சிக்கி 141 பேர் பலி: வியட்நாமில் சோகம்..!

வியட்நாமில் ஏற்பட்ட புயலால் தற்போது 141 பேர் உயிரிழந்துள்ளதுடன் 69 பேர் காணாமல் போயுள்ளனர். வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி புயல் வீசியுள்ளது. புயல் வீசி ஓய்ந்த பிறகு இடி மின்னலுடன் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை...

பயண இடங்களின் பட்டியலில் வெளியீடு :2ஆம் இடத்தை பிடித்த இலங்கை

ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களின் பட்டியலில் இலங்கை 2ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ஊடகமான தி டைம்ஸ் ஒப் இந்தியா குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் கலாசார பாரம்பரியம், பசுமையான தேயிலைத் தோட்டங்கள், கடற்கரைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு புகழ்பெற்ற இடமாக இலங்கை திகழ்வதாக தி டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. குறித்த பட்டியலில், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம்,...

கிரேக்க கப்பலை தாக்கிய ஹௌத்தி

கிரேக்கத்துக்குச் சொந்தமான ஜோக்ராஃபியா (Zografia) என்ற கப்பல் வியட்நாமில் இருந்து இஸ்ரேலுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, செங்கடல் பகுதியில் கடந்த ​​செவ்வாய்கிழமை தாக்கப்பட்டுள்ளது. இக் கப்பலிற்கு சிறிய சேதம் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது ஹௌத்திகளுக்கு ஈரான் வழங்கிய ஆயுதங்களை கைப்பற்றியதாக அமெரிக்க இராணுவம் அறிவித்த நிலையில் இந்த சம்பவம்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img