Tuesday, April 21, 2026
No menu items!

வி.எஸ்.சிவகரன்

மன்னாரில் ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கியுள்ளார் – வி.எஸ்.சிவகரன்!

மன்னாரில் வைத்து ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கி விட்டுச் சென்றுள்ளார். தேர்தல் மேடையில் வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசினுடைய ஆட்சி முறைமைக்கான அவமானம் ஆகும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை (4/18/2025) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிம மண் அகழ்வு திட்டத்தை ஜனாதிபதி நிறுத்த வேண்டும்; வி.எஸ்.சிவகரன்!

மக்களினுடைய நலனை கருத்தில் கொள்ளாமல் பன்னாட்டு கம்பனிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அரசும் செயல்படுவது வேதனைக்குரிய விடயம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் இன்றைய தினம் (16) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், மன்னார் தீவுப் பகுதியில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மற்றும்...

கனிய மணல் அகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஜனாதிபதிக்கு கடிதம்..!

இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு (டைட்டானியம்) கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை. ஆகவே எமது கோரிக்கையை புரிந்து கொண்டு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள...

கணிய மணல் அகழ்வை அனுமதிக்க முடியாது – வி.எஸ்.சிவகரன்..!

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலும்,எதிர்கால நலனையும் பாதிக்கின்ற கணிய மணல் அகழ்வுக்கு ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது எனவும் கணிய மணல் அகழ்வுக்கு சுற்றுச்சூழல்  ஆய்வு அறிக்கையை வழங்க முன்னெடுக்கவுள்ள கள விஜயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் சனிக்கிழமை...

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்; வி.எஸ்.சிவகரன்…

கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் உரிமைக்கான ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொண்ட தமிழினம் பல்வேறு விதமான இழப்புகளையும், நெருக்கடிகளையும், வலிகளையும், வாழ்வியல் சுமைகளையும் எதிர்கொண்டு வருகிறது. எனவே தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என  தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர்...

தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் மோதுண்டு பல அணிகளாக பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டை நாம் இழக்க முடியாது; வி.எஸ்.சிவகரன்…

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் மோதுண்டு பல அணிகளாக பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நாம் இழக்க முடியாது எனவே அனைவரும்  தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் இன்று (11.11.2024) விடுத்துள்ள ஊடக...
- Advertisement -spot_img

Latest News

ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பதிலடி வழங்கியுள்ள ஈரான்!

அமெரிக்க மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவடையும் நிலையில் “ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள் அல்லது குண்டுவீச்சுக்கு ஆளாவீர்கள்” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...
- Advertisement -spot_img