Wednesday, April 29, 2026
No menu items!

வேட்பாளர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் 13 பேர் கைது..!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நேற்று (08/04/2025) கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், மார்ச் 3 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 13 ஆகும். அதனுடன், 42 கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு..!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிளிநொச்சி தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசத்திற்கு இரண்டாவது சந்தர்ப்பத்தை வழங்கும்  தேர்தலாக இந்த தேர்தல் அமைகிறது....

உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பாளர் கஞ்சாவுடன் கைது..!

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கருவலகஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கருவலகஸ்வெவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் புத்தளம், கருவலகஸ்வெவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் வீதி, சிறாம்பியடி பகுதியில் வசிக்கும் நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ...

பட்டலந்த வதைமுகாமை தூசு தட்டும் அனுர அரசின் கோர முகத்தை மக்கள் மறக்கவில்லை – திருஞானசம்பந்தன்!

பட்டலந்த வதை முகாம் விவகாரத்தை தூசு தட்டும் இன்றைய அனுர தலைமையிலான அரசு அன்று மக்கள் மத்தியிலும் நாட்டிற்கும் காட்டிய கோர முகத்தை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை என்று சுட்டிக்காட்டிய சோசலிச சமத்துவ கட்சியின் காரைநகர் வேட்பாளர் பரமு திருஞானசம்பந்தன், யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உச்ச பேசுபொருளாக...

நெடுந்தீவின் எட்டு வட்டாரங்களில் தமிழரசுக் கட்சி பிரசாரப் பயணம்..!

இலங்கை தமிழரசு கட்சி நெடுந்தீவு பிரதேச சபையின் எட்டு வட்டாரங்களுக்குமான உள்ளுராட்சித் தேர்தல் பரப்புரைகளை நேற்று (02.04.2025) மேற்கொண்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இப்பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார். 'பிரச்சார நடவடிக்கையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபைக்கான முதன்மை வேட்பாளர் முன்னாள் ஓய்வுநிலை அதிபர்...

தமிழரசுக் கட்சி வேட்பாளர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு தாக்குதல்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளுராட்சி சபை வேட்பாளரின் அருள்ராஜா பிரேமாகரன் வீட்டின் மீது நேற்று இரவு (31/03/2025) மண்ணெண்ணெய் குண்டுத்தாக்குதலில் வீடு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக வெல்லாவெளி  பொலிஸார் தெரிவித்தனர். போரதீவுப்பற்று பிரதேசசபைக்கான தேர்தலில் போட்டியிடும்  அருள்ராஜா பிரேமாகரன் சம்பவதினமான இரவு மரண வீடு...

ஈ.பி.டி.பியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்..!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தென்மராட்சி சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுகக் கூட்டமும் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம் (4/1/2025) கட்சியின் பிரதேச அலுவலகத்தில் நடைபெற்றது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போடியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களும் கலந்து கொண்ட குறித்த கூட்டத்தில் ஈ.பி.டி.பி...

NPPயின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்..!

தேசிய மக்கள் சக்தியின், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் நேற்று (30/03/2025) இடம்பெற்றது. இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,...

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு..!

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கல்குடா தொகுதி உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் (3/27/2025) கிரான் ரெஜி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன், முற்போக்கு தமிழர் கழகத்தின் கல்குடா தொகுதி ஒருங்கிணைப்பாளர்...

தேர்தல் பிரசாரத்துக்காக செலவிடக்கூடிய தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில்..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பிரசாரத்துக்காக வாக்காளர் ஒருவருக்குச் செலவிடக்கூடிய தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின்படி, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 5 நாட்களுக்குள் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவர் வாக்காளருக்காகச் செலவிடக்கூடிய...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img