எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கருவலகஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருவலகஸ்வெவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் புத்தளம், கருவலகஸ்வெவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் வீதி, சிறாம்பியடி பகுதியில் வசிக்கும் நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை   கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here