#price#srilanka #president #anurakumaradissanayake #topnews
இலங்கை அரசியல்
வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்..!
2023ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அனுமதிக்கும் வகையில் உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
புதிய செய்திகள்
மதரஸா மாணவர்களின் சம்பவம் தொடர்பில் விசாரணையை நடத்த வேண்டும் – ரிஷாட் பதியுதீன்
சீரற்ற காலநிலையால் காரைதீவு - மாவடிப்பள்ளி வீதியில், உழவு இயந்திரம் கவிழ்ந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, உயிரிழந்த 8 மதரஸா மாணவர்களின் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணையை நடத்த வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்றையதினம் (03) நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“அம்பாறை...
புதிய செய்திகள்
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்..!
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) நாளை மறுதினம்(05) இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தின் ஒரு பகுதியாக அவரது இந்த விஜயம் அமையவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இலங்கை கூட்டு...
புதிய செய்திகள்
மக்கள் துணிச்சலான முடிவையும் எடுத்துள்ளனர் – ஹரிணி அமரசூரிய
இலங்கை நாடாளுமன்றத்தை அதிகளவு பிரதிநிதித்துவம் உள்ளதாகவும் அதிகளவு பச்சாதாபம் பரிவுள்ளதாக மக்கள் கோரும் விழுமியங்களை பிரதிபலிக்கும் இடமாகவும் மாற்றுவோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற உரையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தனது உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
எங்கள் மக்கள் எங்கள் பிரஜைகள் எங்களை வித்தியாசமானவர்களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் துணிச்சலான...
புதிய செய்திகள்
இன்றைய தங்க விலையின் நிலவரம்..!
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,
24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 192,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 36,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Top
நாளை இரவு 9.30 மணி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த தீர்மானம்..!
நாடாளுமன்ற கூட்டத்தொடரை நாளை இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தை நாளை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல்...
Top
பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை..!
விசேட காரணங்களுக்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அடுத்த பாடசாலை தவணையில் இருந்து இந்த முடிவு அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு நேற்று (02) அனுமதி கிடைத்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர்...
புதிய செய்திகள்
நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமளிக்க முடியாது – ஆனந்த விஜேபால
நாளைய தினம் பாராளுமன்றத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இனவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியல்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குகிறது அரசாங்கம் – சஜித் பிரேமதாச
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று (03) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கத்திற்கு பெரும் ஆணையைப் பெறுவதற்கு சமூக ஊடகங்கள் உதவியதாகவும், ஆனால் ஆட்சிக்கு...
புதிய செய்திகள்
அதிகரிக்கவுள்ள அஸ்வெசும கொடுப்பனவுத் தொகை..!
அஸ்வெசும நலன்புரிக்கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் வறுமை நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி, வறிய நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 10,000 ரூபாவாகவும், மிக வறிய நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


