கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் அக்காவின் காதலனால்  பாலியல்துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த  சிறுமியே இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்   118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த தகவல் பொலீஸாருக்கு பரிமாறப்பட்டு, கிளிநொச்சி பொலீஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த விடயம்தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை  கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here