Thursday, April 23, 2026
No menu items!

சிறுமி

13 வயது சிறுமி காதல்-தாய் பெற்றோல் ஊற்றி கொலை!

இளவயது காதலால் கொலைகளும் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. பதுளை பகுதியில் 13 வயது சிறுமியொருவர் தனது 28 வயது தாயை எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பெண்ணொருவர் அவரது 13 வயது மகளினால் பெற்றோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படும் நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த பெண்,...

பொகவந்தலாவவில் 13 வயது சிறுமி மரணம்: தொட்டிலில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீட்டொன்றில், 13 வயது சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவம் நேற்று (14) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகவலின்படி, சிறுமியின் உறவினர்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது, அவர்கள் குழந்தைக்காக கட்டப்பட்ட தொட்டிலில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு, அதே...

பெண்கள் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான இலங்கையின் உறுதிப்பாடு – பிரதமர் ஹரிணி அமரசூரியா!

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள், சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதற்கும், அவற்றை நடைமுறைச் செயல்பாடாக மாற்றுவதற்கும் இலங்கை உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரியா தெரிவித்துள்ளார். சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள சீன தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) இன்று (13) நடைபெற்ற பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டம் 2025 தொடக்க விழாவில் கலந்து...

மன்னார்-நானாட்டான் பிரதான வீதியில் கோர விபத்து; சிறுவன் பலி!

மன்னார்-நானாட்டான் பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில், மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை ,தாய்,மகன் மற்றும் மகள்...

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு!

வேலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (20) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த சிறுமி கோவில்கந்த, வட்டப்பொல பகுதியைச் சேர்ந்த 11 வயதானவர் என தெரியவந்துள்ளது. இறந்தவர் நேற்று வீட்டின் ஸ்லப்பில் ஏணியைப் பயன்படுத்தி ஏறிய நிலையில், அங்கு குரங்குகள் வருவதால் கம்பியில்...

சந்தேகத்திற்கிடமான முறையில் 7 வயது சிறுமி உயிரிழப்பு..!

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம பகுதியில், உடல்நலக் குறைவு காரணமாக சிறுமி ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுமி நேற்று (09) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமியை பரிசோதித்த பசறை வைத்தியசாலையின் வைத்தியர், இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இந்த...

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கருத்து!

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் போன்றதொரு சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த சிறுமியின் விடயத்தில் முதலாவது சம்பவம் இடம்பெற்ற உடனேயே அது தொடர்பில் உரிய முறையில் தகவல் பதிவாகவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் தெரிவித்தார். அதேநேரம் எதற்காக இந்த விடயம் சரியான முறையில் பதிவாகவில்லை...

அனுமதியின்றி காரில் நுழைந்து சிறுமியை அச்சுறுத்திய சந்தேக நபர் கைது..!  

அனுமதியின்றி காரில் நுழைந்து எட்டு வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் நேற்று (7/5/2025) கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கடந்த இரண்டாம் திகதி கொழும்பு – கறுவாத்தோட்டம் ப்ளவர் வீதியில் வைத்து காரில் சட்டவிரோதமாக நுழைந்து எட்டு வயது சிறுமியை அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டை...

வீதியைக் கடந்து சென்ற சிறுமி மீது லொறி மோதி விபத்து!

அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய - அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே, பாதெணியவிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற சிறுமி மீது மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. நேற்று (05) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமி, அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமி...

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வேட்பாளர் கைது..!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை - பசறை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 14 வயதுடைய சிறுமி...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img