டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
இதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 96 சிக்ஸர்களை விளாசியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி பெற்ற 89 சிக்ஸர்களே சாதனையாகக் காணப்பட்டது.
இதனை இந்திய அணி தற்போது முறியடித்துள்ளது.
அத்துடன் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணி 87 சிக்ஸர்களை விளாசியது. தற்போது 96 சிக்ஸர்களை விளாசியுள்ளது.