இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கும் இடையில் நேற்று (25) சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பானது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
நாட்டின் தற்போது அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் பெருந்தோட்ட பயிர்களின் உற்பத்தி, அதன் ஏற்றுமதி, போன்றவற்றின் நிலைகள் குறித்து விரிவாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மலையக மக்களின் காணி உரிமை, வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு முறை, தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன் தற்போது வறிய மாணவர்களுக்கான அரசு சத்துணவு வழங்குவது தொடர்பாகவும், தொடர்ச்சியாக அமெரிக்க அரசு இலங்கைக்கு உதவிகள் வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.