ஜோர்டானில் உள்ள அமெரிக்க முகாம்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்களால் ஜோர்டான் நாட்டில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம்கள் மீது இந்த ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 25 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும், காசாவுக்கு எதிரான இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பயங்கரவாத குழுக்களால் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட முதல் சம்பவமாக இது கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here