பாராளுமன்றத்தில் நேற்று(14) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை நிதி ஒத்துழைப்புக்கான அங்கீகாரம் மற்றும் வரவு செலவு திட்ட உரையொன்றின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பள அதிகரிப்பை கோரி வேலைநிறுத்தம் செய்பவர்கள் நாட்டின் எதிர்கால சந்ததியின் வாழ்க்கையை நாசமாக்குகிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் , பத்தாயிரம் ரூபாவுக்காக கருவில் இருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை தங்கள் நிகழ்காலத்திற்காக அழிப்பதற்கு வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்று கடுமையாக சாடினார்.
அத்துடன் இது ஒரு 2048 வரை நீடிக்க வேண்டிய பயணம். சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் கீழ் நாம் செயல்படுத்தும் கொள்கைகள், 20 ஆண்டுகளுக்கு முன்பே செயற்படுத்தியிருக்க வேண்டியவை. ஆனால் சில தேர்தலை இலக்காக கொண்ட அரசியல் குழுக்கள் தோற்றுவிக்கும் மாயைகளால் இவை புறக்கணிக்கப்பட்டன. இவற்றால் நாடு மீண்டும் படுகுழியில் விழாது கவனமாக செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.