இன்று(13) அதிகாலை புத்தளத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி நாடளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் அதே திசையில் சென்ற சிறிய ரக உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாலியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.