ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, “தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை – அது ஒன்றும் பெரியதாக இல்லை – அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளபக்கத்தின் ஊடாக இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (United States Central Command), மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் கார்க் தீவிலுள்ள (Kharg Island) ஒவ்வொரு இராணுவ இலக்கையும் அமெரிக்கா முற்றிலும் அழித்துள்ளதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் எண்ணெய் உள்கட்டமைப்புகளை (Oil Infrastructure) அழிக்க வேண்டாம் என்றும் தான கட்டளையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக செல்லும் கப்பல்களின் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தில் ஈரானோ அல்லது வேறு எவரோ இடையூறு செய்தால், தான் உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here