July 14, 2025
இந்தியாவை வீழ்த்திய  அவுஸ்திரேலியா
News News Line Sports Top Updates புதிய செய்திகள்

இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

Feb 12, 2024

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா அணி சுவீகரித்துள்ளது.

நேற்றைய தினம்(11) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா 43.5 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 174 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய வீரர் மஹ்லி பியர்ட்மன் தெரிவாகியிருந்தார்.

இவ்வுலகக் கிண்ணத் தொடரின் நாயகனாக தென்னாபிரிக்க வீரர் க்னேவா மஃபாகா தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *