Tamil News Channel

இந்தோனேசியாவில் ரயில்கள் மோதி விபத்து

இந்தோனேசிய ஜாவாதீவில் இன்று (05) இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பல பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு,  28 பேர் காயமடைந்ததாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளூர் நேரப்படி காலை 6:03 மணிக்கு விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு ரயில்களிலும் பயணித்த பயணிகளை கவனமாக மீட்கப்பட்டுள்ளதோடு, விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்க்கு ஜாவா பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts