இன்றைய தினம் இலங்கைக்கு கொண்டுவரப்படும் சாந்தனின் பூதவுடல்..!
சென்னையிலிருந்து சாந்தனின் பூதவுடல் சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இன்றையதினம் சென்னையிலிருந்து காலை இலங்கை நோக்கி புறப்படும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் சிறப்பு விமானம் மூலம் சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
அத்துடன் தமிழக அரசு சாந்தனின் பூதவுடலை கொண்டு செல்வதற்கான அனுமதிகளை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு மட்டுமே வழங்கியுள்ளதுடன் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தனிப்பட்ட முறையில் சாந்தனின் குடும்பத்தாரால் ஒழுங்கு செய்யப்ப்ட்டுள்ளதென வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.
![]()