பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.
டாக்காவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக முஸ்பிகுர் ரஹிம் அதிக பட்சமாக 35 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி வீரர் கிளன் பிலிப்ஸ் மற்றும் மிட்சல் சாட்னர் தலா 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்.
தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய நியூசிலாந்து அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 55 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்திருந்தது.
இன்றைய நாள் முடிவின் போது றைல் மிசெல் 12 ஓட்டங்களுடனும், கிளன் பிலிப்ஸ் 5 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 117 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.