1000 – 1300 CC இன்ஜின் திறன் கொண்ட சிறிய கார்களை இறக்குவதற்காக வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வாகன இறக்குமதியில் விரிவான கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களின்படி விரைவில் இந்த முடிவு எடுக்கப்படும் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் , மார்ச் 2020 இலிருந்து 2024 ஜனவரி வரை ஒவ்வொரு ஆண்டுக்கும் 300 – 450 பில்லியன் ரூபா இறக்குமதி வரி வருவாயை நாடு இழந்து வருவதால், வாகனங்களின் இறக்குமதியை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் , எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினால் புதிய வாகன இறக்குமதி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி தொடர்பில் புதிய சட்டங்கள் அல்லது ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து மோட்டார் கார்களை இறக்குமதி செய்வதற்கு தயாராக இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இம்மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 15 சதவீதத்திலிருந்து 18 சதவீத VAT அதிகரிப்பின் காரணமாக உதிரி பாகங்களின் விலைகள் 300-600 ரூபாவால் அதிகரிக்குமென இலங்கை வாகன உதிரிபாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்