
இறுதி போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா..!
அஹமதாபாத், நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற 17ஆவது இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் முதலாவது தகுதிகாண் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப் போட்டியில் 8விக்கட்டுக்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ள இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இப் போட்டியில் 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13.4 ஓவர்களில் மிக இலகுவாக வெற்றிபெற்று நான்காவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.
2012 மற்றும் 2014இலும் சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2021இல் இரண்டாம் இடத்தைப் பெற்று இருந்தமை குறிப்பிடதக்கது.
இன்றைய தினம் அஹமதாபாத் மைதானத்தில் இடம்பெறவுள்ள வெளியேற்ற சுற்று போட்டியில் ராஜாஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பேங்களுரு ஆகிய அணிகள் மோதவுள்ளன.