இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் ஏழு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்றுவரும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி மோசமான படுதோல்வியை சந்தித்திருந்தது.
இதனையடுத்து இலங்கை அணி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்னால் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனக்குள்ள அதிகாரங்களின் பிரகாரம் குறித்த இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிர்வாகத்தின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 7 பேர் கொண்ட குறித்த குழு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்க்பட்டுள்ளது.
இதன்படி, எஸ்.ஐ. இமாம் – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ரோஹிணி மாரசிங்க – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, கௌரவ. ஐராங்கனி பெரேரா – ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி, அர்ஜுன ரணதுங்க (தலைவர்), உபாலி தர்மதாச, ரகித ராஜபக்ஷ – சட்டத்தரணி மற்றும் ஹிஷாம் ஜமால்தீன் ஆகியோர் இந்த குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.