தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் சந்திப்பதற்காக சென்றுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க நேற்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்தார், அங்கு அவரை ஹீத்ரோ விமான நிலையத்தில் இலங்கை சமூகத்தினர் பலரும் வரவேற்றனர்.
ஜூன் 15, 2024 சனிக்கிழமையன்று இங்கிலாந்தில் உள்ள கிரிஸ்டல் கிரான்ட்டில் இலங்கை சமூகத்தினரிடம் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க உரையாற்ற உள்ளார்.