இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்து; பலர் காயம்!

0
2

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது.

சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 11.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here