இஸ்ரேலிய பிரஜைகள் மாலைதீவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது.

காசா யுத்தம் குறித்து மாலைதீவில் மக்களின் கோபம் அதிகரித்துவரும் நிலையிலேயே அந்த நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை தடை செய்வதற்கு ஜனாதிபதி முகமட் முய்சு தீர்மானித்துள்ளார் .

இதனை தொடர்ந்து இஸ்ரேலிய பிரஜைகளை மாலைதீவிற்கு செல்லவேண்டாம் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இஸ்ரேலியர்களிற்கு தடைவிதிக்கவேண்டும் என எதிர்கட்சியினரும் அரசாங்கத்தின் கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்களும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here