July 18, 2025
இ.போ.ச தனியார் மயமாக்கப்படும் சாத்தியம்
News News Line Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

இ.போ.ச தனியார் மயமாக்கப்படும் சாத்தியம்

Nov 30, 2023

இந்த ஆண்டிற்குள் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) இலாபம் ஈட்டாவிடின், அதனை தனியார் மயமாக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், இதை தவிர்க்க வேண்டுமாயின் இலங்கை போக்குவரத்து சபையை இலாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையில் பல டிஜிட்டல் திட்டங்களை எதிர்வரும் ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் பணிப்பாளர் தலைமையில் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *