இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் உடல் பாகங்களுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தியதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் காங்கேசந்துறை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் செப்டம்பர் 21 ஆம் திகதி காலை, இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பெண் வந்தடைந்த போதே இடம்பெற்றது.
சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சந்தேகத்திற்கிடையிலான சோதனையின் போது, சந்தேகநபர் தமது உடலுக்குள் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர்,
சந்தேகநபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு, மருத்துவ பரிசோதனைக்குப்பின் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன் மூலம், உடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிராம் தங்கம் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கம் மீட்கப்பட்டதும், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர் கொழும்பை சேர்ந்த 41 வயதுடையவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சுங்கத் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.







