இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் மே மாதம் 2026-ல் 1.6% அதிகரித்து, 6.873 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2026 மாத இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 6.766 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து இந்த கையிருப்பு அதிகரித்துள்ளது; இது மே மாதத்தில் 107 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.
சீன மக்கள் வங்கியுடனான மாற்று ஏற்பாட்டின் மூலம் கிடைத்த வருவானமும் இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் எண்ணிக்கையில் அடங்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.








