மீகொடையில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பாகத் தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்தி பின்னர் தப்பி ஓடிய வாடகைக் காரின் உரிமையாளரும், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் இன்று காலை (6) சட்டத்தரணி மூலம் மீகொடை காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெசாக் தானசாலையில் (தன்சல்) வரிசையில் நின்றிறுந்த பொது மக்கள் மீது குறித்த வாகனம் மோதியதில் அங்கிருந்த ஆறு பேர் உயிரிழந்ததுடன் பலரும் காயத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாகனத்தை செலுத்தியவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here