உலகிலேயே வாகனங்கள் மிக மெதுவாக இயக்கப்படும் நகரமாக லண்டன் பதிவாகியுள்ளது.
இதன்படி, மத்திய லண்டனில் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 37 நிமிடங்கள் 20 நொடிகள் ஆகுமென கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள 55 நாடுகளில் 387 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் மையத்தில் மணிக்கு 50 மைல் தாண்டி வாகனங்களை இயக்க முடியாது எனவும், வாகனத்தை வேகமாக இயக்கக் கூடிய கட்டமைப்பு குறித்த பகுதியில் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லண்டனுக்கு அடுத்தபடியாக அயர்லாந்து நாட்டின் டப்ளின், கனடாவின் டொரன்டோ, இத்தாலியின் மிலன், பெருவின் லிமா ஆகிய நகரங்கள் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது என சரவதேச உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.